மேலும் செய்திகள்
ஆரோக்கியத்தை தரும் சோயா பீன்ஸ் பான் கேக்
07-Jun-2025
ஹோட்டல்களில் விற்கப்படும் 'மதராஸ் மசாலா' பாலை, ஒரு முறை குடித்தால், மீண்டும் குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். மதராஸ் மசாலா பால் தேடி, ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. அதை வீட்டிலும் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்
பால் - 3 கப் சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் பாதாம் - கால் கப் ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன் லவங்கம் - 3 பட்டை - 1 துண்டு பிஸ்தா - ஒரு டேபிள்ற ஸ்பூன் குங்குமப்பூ - சிறிதளவு செய்முறை
பாதாமை அரை மணி நேரம், வென்னீரில் ஊற வைக்கவும். அதன் தோலை நீக்கி விட்டு, மிக்சியில் அரைக்கவும். பாலை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் துாள் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். மூன்று கப் பால், இரண்டு கப்பாக ஆகும் வரை கொதிக்க வேண்டும்.இதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பாதாம் கலவையை சேர்க்கவும். அதன்பின் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்தால், மதராஸ் மசாலா பால் தயார். சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும். - நமது நிருபர் -
07-Jun-2025