உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சுவையான பலாச்சுளை ரசம்

சுவையான பலாச்சுளை ரசம்

பலாப்பழ சீசன் வந்தால், கர்நாடக கடலோரம் மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களின் மக்களுக்கு கொண்டாட்டம் தான். பலாப்பழ பாயசம், ஹல்வா, தோசை, கொழுக்கட்டை, சிப்ஸ், அப்பளம், வத்தல் உட்பட, பல விதமான தின்பண்டங்களை தயாரித்து ருசிப்பர். பலாப்பழ சீசன் முடியும் வரை, அனைவரின் வீடுகளிலும் பலாப்பழத்தால் தயாரான சிற்றுண்டிகள் கட்டாயம் இருக்கும்.ஆனால் பலாச்சுளையில் சூப்பரான ரசம் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. அதை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோமா?

செய்முறை

முதலில் பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி, குக்கரில் வைத்து தேவையான அளவு உப்பு, மிளகாய் துாள், பச்சை மிளகாய், ரசப்பொடியை சேர்த்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதன்பின் இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன்பின் அடுப்பில் பாத்திரம் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். இந்த பாத்திரத்தில், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால், பலாச்சுளை ரசம் தயார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி