உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சுவையான மிளகு முட்டை தொக்கு

 சுவையான மிளகு முட்டை தொக்கு

- நமது நிருபர் -: முட்டையை வைத்து எளிய முறையில், 'மிளகு முட்டை தொக்கு' செய்து அசத்தலாம். இதை செய்வது சுலபம். அதே சமயம், சுவை பிரமாதமாக இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால், மீண்டும் சாப்பிட தோணும். தேவையான பொருட்கள் l எண்ணெய் 3 ஸ்பூன் l பச்சை மிளகாய் 2 l இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன் l நறுக்கிய வெங்காயம் 1 கப் l தக்காளி 1 l உப்பு தேவையான அளவு l மிளகாய் தூள் 1 ஸ்பூன் l கரம் மசாலா 1 ஸ்பூன் l மிளகு தூள் 2 ஸ்பூன் l கொத்தமல்லி சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு l முட்டை 2 l மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் செய்முறை முதலில் வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் துாள், உப்பு சேர்க்கவும். இதில், கட் செய்த முட்டையை போட்டு பொன்னி றமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின், அதே வாணலியில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில், நறுக்கிய தக்காளி, உப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு துாள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் இதனுடன் தயார் செய்து வைத்த முட்டையை போட வேண்டும். முட்டையுடன் மசாலா சேரும் வரை மிதமான தீயில் வதக்கி எடுக்க வேண்டும். அவ்வளவு தான் மிளகு முட்டை தொக்கு தயார். இதை அப்படியே சுடு சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை