மேலும் செய்திகள்
ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்
11-May-2025
மிட்டாய் என்றாலே குழந்தைகள் குஷியாகி விடுவர். மிட்டாய் சாப்பிடுவதாக குழந்தைகளின் பற்கள் சேதமடையும், சுகவீனம் அடைவர் என பெற்றோர் வருத்தப்படுவர்.இதுவே புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் என பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்த முட்டையில் மிட்டாய் செய்து கொடுத்தால், எந்தவித பயமும் வேண்டாம். செய்முறை
கடாயில் 1 லிட்டர் கொழுப்பு இல்லாத பால் ஊற்றி, நன்கு சுண்ட காய்ச்சவும். பால் பாதியாக குறைந்து, அதன் பின், பால்கோவாவை சேர்க்கவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கலந்து விட்டு கொண்டே இருங்கள். இதில், 200 கிராம் அளவிற்கு கோவா கிடைக்கும். இதை மிக்சியில் போட்டு ஒரு முறை அரைத்துவிடவும். இதற்கிடையில், 50 கிராம் பாதாமை 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். தோல் உரித்து, கால் டம்ளர் பால் ஊற்றி, மிக்சியில் அரைக்கவும். அனைத்தையும் சேர்த்து, கால் கப் அளவுக்கு நெய் ஊற்றி, விஸ்க் வைத்து நன்கு அடிக்கவும். இதில், ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி, விஸ்க் வைத்து தொடர்ந்து கலந்துவிட்டு கொண்டே இருங்கள். அடுத்ததாக, 200 கிராம் சர்க்கரை, ஒரு சிட்டிகை ஏலக்காய் துாள் போடவும். மொத்தத்தையும் கடாய்க்கு மாற்றி, அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 30 நிமிடம் சூடுபடுத்துங்கள். கொஞ்சம் கெட்டியாகும் வரை சூடுபடுத்தினால் போதும். பாதாம் பருப்பை பொடி பொடியாக நறுக்கி, மேலே துாவுங்கள். 30 நிமிடங்களுக்கு பின், சிவந்து நன்றாக வெந்த பின், அதன் மீது நெய் ஊற்றவும். 15 நிமிடங்கள் ஆறிய பின், துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம் - நமது நிருபர் -.
11-May-2025