முட்டை லவாப்தார் கிரேவி
- நமது நிருபர் - முட்டையை வைத்து முட்டை குழம்பு, ஆம்லெட், ஆப் பாயில் செய்ய முடியும். வேகவைத்தும் சாப்பிடலாம். முட்டையில் சற்று வித்தியாசமாக லவாப்தார் கிரேவி செய்யலாம். அதன் விபரம்: தேவையான பொருட்கள் l ஆறு முட்டை l நான்கு தக்காளி l முந்திரி பருப்பு 20 l ஒரு பிரியாணி இலை l பட்டை, ஏலக்காய், கிராம்பு ஒன்று l ஒரு டீஸ்பூன் சர்க்கரை l ஒரு டீஸ்பூன் சீரகம் l இரண்டு வெங்காயம் l ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது l அரை டீஸ்பூன் மஞ்சள் துாள் l இரண்டு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் துாள் l ஒரு டீஸ்பூன் சீரக துாள் l இரண்டு டீஸ்பூன் தனியா துாள் l நான்கு பச்சை மிளகாய் l ஒரு டீஸ்பூன் கரம் மசாலா துாள் l கசூரி மேத்தி, கொத்துமல்லி இலை தேவையான அளவு செய்முறை: பவுலில் தண்ணீர் ஊற்றி முந்திரி பருப்பு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்குள் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின், நறுக்கிய தக்காளி, ஊற வைத்த முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து முதலில் வதக்க வேண்டும். பின், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், மஞ்சள், மிளகாய், சீரகம், மல்லி துாள், தேவையான உப்பு சேர்த்து வதக்க வேண்டும். நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா துாள், சர்க்கரை சேர்த்து, வாணலியை தட்டு வைத்து மூடி விடவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து கசூரி மேத்தியை கசக்கி போட வேண்டும். பின், முட்டையை உடைத்து ஊற்றி, மீண்டும் வாணலி மீது தட்டு வைத்து மூடி, பத்து நிமிடங்கள் வேக விடவும். பின், வாணலி மூடியை திறந்து, கொத்துமல்லி இலையை துாவி இறக்கினால் முட்டை லவாப்தார் ரெடி. சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சூப்பர் ரெசிபியாக இருக்கும். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.