மேலும் செய்திகள்
செட்டிநாட்டு வடைகறி
17-May-2026
- நமது நிருபர் -: இந்த வாரம் வீட்டிலேயே, முட்டை ஆம்லேட் கறி செய்து அசத்தலாம். செய்முறை: முதலில், கடாயை சூடேற்றி, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை, 2-3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அதற்கு முன், ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள முட்டைகளை உடைத்து போட்டு, மிளகாய் துாள், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின், வதக்கி வைத்துள்ள வெங்காயத்துடன் முட்டைகளை ஊற்றி, சிறிது நேரம் கிளறி விட்டு, தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். இதையடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். இதனுடன் சீரகத்துாள், மஞ்சள் துாள், மல்லி துாள், மிளகாய் துாள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இதனுடன் தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். இறுதியாக முன்னதாக செய்து வைத்துள்ள ஆம்லேட் கறியை, கிரேவியில் சேர்த்து சில நிமிடங்கள் அப்படியே மூடி வைத்துவிடவும். இறுதியாக கொத்துமல்லி தழையை ஆம்லேட் கறி குழம்பில் சேர்த்து கிளறிவிட்டால் போதும், சுவையான மற்றும் காரசாரமான முட்டை ஆம்லேட் கறி தயார்!
17-May-2026