உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / முட்டை சேர்க்காத பேரீச்சம் பழம் கேக்

முட்டை சேர்க்காத பேரீச்சம் பழம் கேக்

கேக் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் கேக் விருப்பமான தின்பண்டம். ஆனால் இதில் முட்டை சேர்ப்பதால், சைவ உணவு பிரியர்கள் கேக் சாப்பிட தயங்குகின்றனர். முட்டை சேர்க்காமலும் ஆரோக்கியமான, சுவையான பேரீச்சம் பழம் கேக் செய்யலாம்.

செய்முறை

முதலில் பேரீச்சம் பழத்தின் கொட்டையை நீக்கி, பாலில் ஊற வைக்கவும். சிறிது நேரத்துக்கு பின், இதை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். இதில் எண்ணெய், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.இக்கலவையில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை போட்டு நன்றாக கலக்கவும். இட்லி மாவு போன்று கெட்டியாக இருக்க வேண்டும். மாவை, கேக் டிரேவில் போடவும். விருப்பம் இருந்தால் இதன் மீது பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்களை துாவி அலங்கரிக்கலாம். இதை ஓவனில் வைத்து 40 நிமிடம் வைத்து வேக வைத்தால், சுவையான கேக் தயார்.சர்க்கரை இல்லாமல் தயாரிப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் தயங்காமல் சாப்பிடலாம். பேரீச்சம் பழம் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு இரும்புச்சத்து கிடைக்கும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை