உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மழைக்கு இதமான இஞ்சி பர்பி

மழைக்கு இதமான இஞ்சி பர்பி

இஞ்சியில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளன. அஜீரணம், குமட்டல், சளி, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்கும். கஷாயம் தயாரிக்க இஞ்சி பயன்படுத்துகின்றனர். ஆனால் இஞ்சியை சாப்பிட குழந்தைகள் மறுப்பர். இஞ்சியை இனிப்பான பர்பியாக தயாரித்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கு இஞ்சி பர்பி மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

 இஞ்சி - 200 கிராம் உப்பு - 1 ஸ்பூன் சர்க்கரை - 2 கப் பால் - 2 கப் ஏலக்காய் துாள் - 1 ஸ்பூன் நெய் - 4 ஸ்பூன்

செய்முறை

முதலில் இஞ்சியை, நன்றாக கழுவி, தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றவும். காய்ந்த பின் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.இதில் சர்க்கரை சேர்த்து, 10 முதல் 12 நிமிடம் வேக வைக்கவும். கலவை கெட்டியாக திரண்டு வரும் போது, பால், ஏலக்காய் துாள், உப்பு போட்டு கை விடாமல் கிளற வேண்டும். அதன் பின் இதை நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். 20 நிமிடம் ஆற விட வேண்டும். ஆறிய பின் விருப்பமான வடிவில் வெட்டி கொண்டால், சுவையான இஞ்சி பர்பி தயார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை