உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / ஹைதராபாத் முட்டை காகினா

ஹைதராபாத் முட்டை காகினா

இந்த முட்டையை வைத்து, இம்முறை பெர்ஷியன் - முகலாயர்கள் பயன்படுத்திய 'ஹைதராபாத் அண்டா கா காகினா' எனும் ஹைதராபாத் முட்டை காகினா செய்யலாம்.

செய்முறை

 பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும், இரண்டு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு வதக்கவும் வதங்கும்போது, ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், இரண்டு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு சேர்க்கவும் வெங்காயத்தின் நிறம் மாறி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் வாசனை போன பின், இரண்டு முட்டைக்கு தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிடவும் உப்பு போட்ட 30 விநாடிகள், முட்டையை 'ஹாப் பாயில்' போடுவது போல உடைத்து ஊற்றுங்கள். வேறு எதுவும் செய்ய கூடாது முட்டையின் மஞ்சள் கரு வேகக் கூடாது இதற்கிடையில், 3 - 4 பல் பூண்டு இடித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் துாள் சேர்க்கவும் இதை ஸ்பூன் வைத்து கலந்து விட்டு வேகும் முட்டையின் மீது ஆங்காங்கே துாவிவிடவும் அவ்வளவு தான் 'ஹைதராபாத் முட்டை காகினா' ரெடி.ஒரு முறை இதை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். அதன் பின்னர், குழந்தைகள் வெறும் முட்டை வேண்டாம். ஹைதராபாத் முட்டை காகினா தான் வேண்டும் என்று அடம் பிடிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை