உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / புதுமையான கேரட் ஜாமூன்

புதுமையான கேரட் ஜாமூன்

இனிப்பு என்றால் அனைவருமே விரும்புவர். குறிப்பாக குட்டீஸ்கள் விதவிதமான இனிப்புகளை செய்து தரும்படி, அம்மாக்களை நச்சரிப்பர். கடையில் சுகாதாரமற்ற இனிப்பு பண்டங்களை வாங்காமல், வீட்டிலேயே ஆரோக்கியமான இனிப்பு செய்யலாம். கேரட் ஜாமூன் செய்து அசத்துங்கள். செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து சர்க்கரையை போடவும். சர்க்கரை கரைந்த பின், அதில் ஏலக்காய் துாள் போடவும். அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை கீழே இறக்கவும். கேரட்டுகளை தோல் சீவி, நன்றாக கழுவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றவும். காய்ந்ததும் கேரட் கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும். இந்த கலவையில் பால் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் பாம்பே ரவை, பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். கலவை கெட்டியாகும் வரை, மிதமான தீயில் வைக்கவும். அதன்பின் அதை கீழே இறக்கி வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாம்பே ரவை, கேரட் கலவையை சிறு,சிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். பொரித்து எடுத்து, அகலமான தட்டில் வைக்கவும். ஆறியதும், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போடவும். அரை மணி நேரம் மூடி வைத்தால், சுவையான கேரட் ஜாமூன் தயார். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !