மேலும் செய்திகள்
நாவில் எச்சில் ஊற வைக்கும் 'அப்பள குழம்பு'
22-Feb-2025
இதை தயாரிக்க, இட்லிக்கு மாவு அரைப்பது போன்று, அரைத்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தட்டு இட்லி குக்கர் இருந்தால் போதும். செய்முறை
இரண்டு கப் பச்சரிசி எடுத்து, தண்ணீரில் நன்கு கழுவி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். கால் கப் அவலை, பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும் பச்சரிசி, அவலில் இருக்கும் தண்ணீரை வடிகட்டவும்; பின்னர் பச்சரிசியை மட்டும் மிக்சியில் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, சிறிது கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் இதில் இருந்து கால் கப் மாவு எடுத்து, வாணலியில் போட வேண்டும். அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பசை போன்று வரும் வரை கிண்டவும். சூடு நன்றாக ஆற வேண்டும் இதன் பின், ஊற வைத்த அவல், ஒரு கப் தேங்காய் துருவல், முக்கால் கப் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் ஈஸ்ட், தேவையான அளவு கல் உப்பு, பசை போன்று ஆற வைத்த மாவை மிக்சியில் போட்டு, அரை கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும் சிலர் நாட்டு சர்க்கரை பயன்படுத்துவர். நாட்டு சர்க்கரை பயன்படுத்தினால், வட்டயப்பத்தின் நிறம் மாறிவிடும் ஏற்கனவே அரைத்த மாவுடன் புதிய ஈஸ்ட் பயன்படுத்தி, எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு பொங்கி வந்ததும் அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி போட்டு கலக்கவும். தட்டு இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி, ஒவ்வொரு அடுக்கிலும் மாவு ஊற்றி, வேக வைத்து எடுக்கவும் இட்லி போல வெந்தவுடன், தட்டில் இருந்து எடுத்து, கறி குழம்பு அல்லது காய்கறி குருமா ஊற்றி, சாப்பிட்டு பாருங்கள்; ருசி வேற லெவலில் இருக்கும்.
22-Feb-2025