உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  உடல் கொழுப்பை கரைக்கும் மஷ்ரூம் பரோட்டா

 உடல் கொழுப்பை கரைக்கும் மஷ்ரூம் பரோட்டா

பொதுவாக பரோட்டா என்றால், அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால், சிலர் சாப்பிட அஞ்சுவர். ஆனால் மஷ்ரூம் பரோட்டா சாப்பிட்டால், ஊட்டச்சத்து கிடைக்கும்; எடை அதிகரிக்கும் என்ற பயமும் தேவையில்லை. இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா? தேவையான பொருட்கள் l கோதுமை மாவு - 1 கப் l மஷ்ரூம் - ஒரு கப் (சிறிதாக நறுக்கியது) l வெங்காயம் - 1 l பச்சை மிளகாய் - 1 l இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி l மிளகாய் துாள் - கால் ஸ்பூன் l சீரக துாள் - கால் ஸ்பூன் l ஓட்ஸ் அல்லது கடலை மாவு - ஒரு ஸ்பூன் l உப்பு - தேவையான அளவு l ஆலிவ் ஆயில் அல்லது நெய் - தேவையான அளவு செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து, அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன்பின் சிறிதாக நறுக்கிய மஷ்ரூம்களை போட்டு, நான்கைந்து நிமிடம் கிளறவும். இதில் உப்பு, மிளகாய் துாள், சீரக பொடி, நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து கிளறுங்கள். இதை ஆற விடுங்கள். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓட்ஸ் துாள் அல்லது கடலை மாவு, சிறிதளவு உப்பு போட்டு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று மென்மையாக பிசையவும். சிறிதளவு தயிர் சேர்த்துக் கொண்டால், மிருதுவாக இருக்கும். மாவை 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். அதன்பின் மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, சிறிய சப்பாத்தி போன்று தட்டவும். அதன் நடுவில் இரண்டு ஸ்பூன் மஷ்ரூம் கலவையை வைத்து, மாவை உருட்டி உலர்ந்த கோதுமை மாவில் லேசாக பிரட்டி, பரோட்டா வடிவில் தட்டவும். அடுப்பில் நான் - ஸ்டிக் வாணலியை வைத்து, ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பரோட்டாவை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும். தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், தக்காளி சட்னி, அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். மஷ்ரூமில் வைட்டமின் டி, பி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. உடலின் கொழுப்பை கரைக்க உதவும். இதயத்துக்கும் நல்லது - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை