மேலும் செய்திகள்
கத்திரிக்காயில் செய்யலாமே 'சூப்பர் துவையல்'
12-Jul-2025
அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன், சிக்கன், காடை, இறால் உட்பட பல அசைவ உணவுகள் பிடித்தாலும், மீன் குழம்புக்கு என்று தனி இடம் உண்டு. மற்ற அசைவ குழம்புகளை, இரண்டு, மூன்று நாட்கள் வைத்து சாப்பிட முடியாது. ஆனால் மீன் குழம்பு மட்டுமே, மூன்று நாட்கள் ஆனாலும் சுவை மாறாமல் இருக்கும். இட்லி, தோசைக்கும், பழைய சோறுக்கும் வைத்து சாப்பிட சூப்பர் டேஸ்டாக இருக்கும். மீன் குழம்பு ஒவ் வொருவரும் ஒவ்வொரு மாதிரி வைப்பர். கட்லா, ஜிலேபி, பாறை, வஞ்சரம், மத்தி என மீனில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் மீன் குழம்பு வித்தியாசமாக இருக்கும். ஆந்திராவின் நெல்லுார் ஸ்டைல் மீன் குழம்பு எப்படி வைப்பது என பார்ப்போம். செய்முறை மீனை நன்கு கழுவி துண்டு, துண்டாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் பவுடர், மிளகாய் பவுடர் சேர்ந்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து தனியா, கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொன்னிறமாக நன்கு வறுத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்ந்து நன்கு வதக்கியதும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்ந்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விடவும். பின், மஞ்சள் பவுடர், மிளகாய் பவுடர் சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, மண் சட்டி மீது ஒரு தட்டை வைத்து மூடிவிட்டு, 10 முதல் 15 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து வந்ததும், மசாலா பொருள் கலவையில் இருக்கும், மீன் துண்டுகள், மாங்காயை போட்டு, மீண்டும் தட்டை வைத்து மூடிவிடவும். மீன் துண்டுகள் நன்கு வெந்ததும், கொத்தமல்லி இலை சிறிதளவு துாவி அடுப்பை ஆப் செய்து விடவும். சூடான, டேஸ்டான நெல்லுார் ஸ்டைல் மீன் குழம்பு தயார். இந்த மீன் குழம்பு தேங்காய் பயன்படுத்தாமல் செய்யப்படுவது இன்னொரு சிறப்பு - நமது நிருபர் - .
12-Jul-2025