மேலும் செய்திகள்
வடமாநிலத்தின் மால்புவா ஸ்வீட் செய்யலாமா?
15-Mar-2025
புதுடில்லியின் சாந்தினி சவுக்கில் பல விதமான பரோட்டாக்கள் கிடைக்கும். இங்கு உருளைக்கிழங்கு, கோபி என பல வகையான பரோட்டாக்கள் செய்யப்படுகின்றன.அதுபோன்று, உலர்ந்த பழங்களில் பரோட்டாக்கள் செய்வதை இந்த வாரம் பார்க்கலாம். செய்முறை
கோதுமை மாவு, ஆளி மாவு, நெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்பின், பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சையை சிறிய துண்டுகளாக நறுக்கவும் ஓமம், ஏலக்காய் துாள், கருப்பு மிளகு துாள் ஆகியவற்றை சேர்ந்து கலக்கவும்அதனுடன் நறுக்கப்பட்ட பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சையை கலக்கவும். பின், இதை உருண்டையாக மாற்றிக் கொள்ளவும்உருண்டைகளை சப்பாத்தி போல தேய்த்து, தோசை கல்லில் இட்டு சுட்டு எடுக்கவும்இதனுடன் உங்களுக்கு தேவையான சப்ஜி அல்லது ஊறுகாய் சேர்த்து சாப்பிடலாம். - நமது நிருபர் -
15-Mar-2025