உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மண் சட்டியில் கமகமக்கும்

மண் சட்டியில் கமகமக்கும்

இறைச்சி பிரியர்கள் மிகவும் விரும்பும் உணவு பட்டியலில் மீனுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். மீனில் பல வகை உள்ளது. ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு டேஸ்டாக இருக்கும். கிராமத்து ஸ்டைலில் திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை

தோல் உரித்த பூண்டை அம்மியில் போட்டு லேசாக நைத்து எடுக்கவும். பின், அம்மியில் சோம்பு, சீரகம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து நைசாக அரைத்து கொள்ளவும். மஞ்சள், மிளகாய், மல்லி பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.அடுப்பை ஆன் செய்து மண் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு சூடானதும் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின், நைத்து வைத்திருக்கும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொண்டே இருக்கவும். பின், தக்காளி, கல் உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். இதனுடன் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை போட்டு, மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும். அரைத்து வைத்து உள்ள மசாலா சேர்த்தும் வதக்கவும். புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, ஒரு பாத்திரத்தை வைத்து மண் பானையை மூடிவிடவும்.குழம்பு கொதித்து வரும் போது நறுக்கிய மாங்காய் துண்டு, அரைத்த மிளகு பவுடர் சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் கிராமத்து ஸ்டைல் திருக்கை மீன் குழம்பு தயார்.மண் சட்டியை மறந்து பல காலம் ஆகி விட்டது. மீன் கறி, குழம்பு செய்ய வேண்டுமானால் மண் சட்டியை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை