மேலும் செய்திகள்
துளு சமுதாய மக்களின் 'கோரி கஸ்சி' அசைவ குழம்பு
12-Apr-2025
அனைவருக்கும் பிடித்தமான குழம்புகளில் ஒன்று மீன் குழம்பு. இதை சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சுவை பிரமாதமாக இருக்கும். அதுவும் பழைய மீன் குழம்புடன் இட்லியை தொட்டு சாப்பிட்டால், அவ்வளவு ருசியாக இருக்கும்.மீனில் நிறைய வகை உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மீனின் சுவை பிடிக்கும். சிலருக்கு மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீனை பிடிக்கும். இந்த மத்தி மீனை வைத்து, ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் சுவை, அறுசுவையாக இருக்கும். செய்முறை
முதலில் மத்தி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். சுத்தம் செய்த மீனில், மிளகாய் துாள், காஷ்மீர் மிளகாய் துாள், மஞ்சள் துாள், மிளகு துாள், உப்பு ஆகியவற்றை தூவி நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.இதன்பின், ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, அதில் மசாலாவுடன் கலந்து வைக்கப்பட்ட மீனை இரண்டு பக்கமும் போட்டு, நன்றாக ரோஸ்ட் செய்து, வேறு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.அதே வாணலியில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிய பின், தக்காளியை சேர்த்து கொள்ளவும்.இதில், மிளகாய் துாள், உப்பு, கரைத்து வைத்த புளி தண்ணீரை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின், ரோஸ்ட் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.அவ்வளவு தான் சுவையான மத்தி மீன் ரோஸ்ட் தயார். இதை சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சுவை அதிரடியாக இருக்கும். - நமது நிருபர் -
12-Apr-2025