மேலும் செய்திகள்
முருங்கைக்கீரை இடியாப்பம் செய்யலாமா!
28-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
'சிலோன் லவரியா' என்பது இலங்கையின் பிரபலமான இனிப்பு. 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தில், சிலோன் லவரியா இனிப்பு பலகாரத்தை செய்து, நடிகை சிம்ரன் பக்கத்து வீட்டிற்கு கொடுப்பார்.இந்த படத்திற்கு பின், சிலோன் லவரியாவுக்கு மவுசு கூடி உள்ளது. யு - டியூப்பில் பார்த்து நிறைய பேர் செய்ய ஆரம்பித்து உள்ளனர். தேவையான பொருட்கள்
கால் கிலோ அரிசி மாவு தேங்காய் துருவல் ஒரு கப் அரை கப் பொடியாக்கிய வெல்லம் நெய் நான்கு ஸ்பூன் முந்திரி, திராட்சை தேவையான அளவு செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து, நெய் ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு 'பாகு' தயாரிக்க வேண்டும். அதில் தேங்காய் துருவலை போட்டு கிளறிவிட்டு அடுப்பை 'ஆப்' செய்து விடவும். பாகுடன், தேங்காய் துருவல் நன்றாக கலக்கும் போது ஏலக்காய் பவுடரை துாவவும்.ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரிசி மாவு போட்டு, உப்பு, நெய் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி பூரிக்கு பிசைவது போன்று மாவை பிசைய வேண்டும்.மாவு பதத்திற்கு வந்ததும், வாழை இலையை எடுத்து அதில் நெய் தடவி இடியாப்ப குழலில் போட்டு, முறுக்கு பிழிவது போல் பிழிந்து விடவும். அடுப்பை ஆன் செய்து இட்லி குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பிழிந்து வைத்திருக்கும் வாழை இலையுடன் கூடிய அரிசி மாவு இடியாப்பத்தை மூடிவிடவும். பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து எடுத்து பார்த்தால், சூடான சிலோன் லவரியா ரெடி.இதற்கு நடுவில் மாம்பழம், ஸ்ட்ராபெரி, மாதுளை பழங்களை வைத்து சாப்பிட்டால் சுடுதல் சுவை கிடைக்கும். காலை உணவாகவோ, மாலையில் ஸ்நாக்ஸ் ஆகவோ சாப்பிடலாம். - நமது நிருபர் -
28-Jun-2025
16-Jun-2025