மேலும் செய்திகள்
மணம் வீசும் மணப்பட்டி சிக்கன் சுக்கா
30-Aug-2025
மட்டன் இஞ்சி விரவல்
31-Aug-2025
சிக்கன் வறுவல் சுவையை மிஞ்சும் அளவிலான சுவையான, சூப்பரான சோயா மிளகு கறி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போமா. செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதில் சோயாவை போட வேண்டும். சோயா வெந்த பின், அதை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து, வேறு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் சீரகம், மல்லி, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். இதை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை சோயாவில் போட்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லி துாள், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். இதில், சோயாவை கொட்டி லேசாக வதக்கவும். அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வாணலியை மூடி வைக்கவும். பிறகு, மூடியை எடுத்து விட்டு சோயாவை லேசாக வதக்கி எடுத்தால் சுவையான சோயா மிளகு கறி தயார். சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சோயா மிளகு கறியை சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். - நமது நிருபர் -
30-Aug-2025
31-Aug-2025