உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / இலங்கை சிக்கன் சொதி குழம்பு

இலங்கை சிக்கன் சொதி குழம்பு

அசைவ பிரியர்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு வகைகள் என்றால் அது சிக்கன் சார்ந்தவையே. இந்த சிக்கனை வைத்து, பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் ப்ரை, கிரேவி உள்ளிட்ட பல வகைகளை விரும்பி சாப்பிடுவர்.இப்படிப்பட்ட சிக்கனை பிற மாநிலத்து ஸ்டைலில் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால், பிற நாட்டு ஸ்டைலில் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இதுவரை சாப்பிட்டிருக்காத வகையில், ஒரு புதுவிதமான சுவையில் இருக்கும், 'இலங்கை சிக்கன் சொதி குழம்பு'.இது செய்வதற்கு சுலபம், தாளிப்புக்காக எதுவுமே சேர்க்க தேவையில்லை. இதை இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.தேவையான பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோபெரிய வெங்காயம் - 2தக்காளி - 2மஞ்சள் துாள் - 1/4 டீஸ்பூன்பச்சை மிளகாய் - 4தேங்காய் பால் - 2 கப்எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவுசெய்முறை:ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின்பு, அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.இதில், மஞ்சள் துாள், உப்பு, சிறிதளவு தண்ணீர், சிக்கன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். சிக்கன் வெந்த பின் தேங்காய் பால், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் துாவி, கொதிக்க வைக்காமல் இறக்கிவிட வேண்டும்.அவ்வளவு தான், சுவையான இலங்கை சிக்கன் சொதி குழம்பு தயார். இந்த சுவையான குழம்பை இடியாப்பம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். *** - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை