உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வா

 சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வா

- நமது நிருபர் - பத்து நிமிடங்களில் ஆரோக்கியமான சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வாவை ரெடி செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள் l சர்க்கரை வள்ளி கிழங்கு - 1 l நெய் - சிறிதளவு l நாட்டு சர்க்கரை - ஒரு கப் l ஏலக்காய் துாள் - சிறிதளவு l பாதாம், வால்நட், முந்திரி - சிறிதளவு செய்முறை l முதலில் பெரிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக சுத்தம் செய்த பின், அதன் தோலை நீக்கிவிடுங்கள். l பின்னர் கேரட் துருவுவது போன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கை நைசாக துருவி கொள்ளுங்கள். l ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி வால்நட், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து எடுத்து கொள்ளுங்கள். l பிறகு வாணலியில் நெய் ஊற்றி, துருவி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 2 நிமிடங்கள் மூடி போட்டு மூடி வையுங்கள். l உங்களின் சுவைக்கு ஏற்றவாறு நாட்டு சர்க்கரையை சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து நன்கு கிளறவும். l ஐந்து நிமிடங்களுக்கு பின், ஏலக்காய் துாள் சேர்த்து கொள்ளுங்கள். l நிறைவில் வறுத்து வைத்துள்ள வால்நட், முந்திரி,பாதாம் போன்றவற்றை சேர்த்து இறக்கினால் போதும். ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வால்நட் அல்வா தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி