சூப்பர் டேஸ்டி அவல் நெகட்ஸ்
அவல் பயன்படுத்தி உப்புமா, பாயசம், இட்லி, தோசை என, பல்வேறு தின்பண்டங்களை செய்யலாம். இதில் சூப்பர் டேஸ்டி நெகட்சும் செய்யலாம். செய்முறை முதலில் அவலை கழுவி, சில நிமிடங்கள் ஊற விடவும். உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோல் உறிக்கவும். இவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு மசிக்கவும். இதில் அவல், கடலை மாவு, சோளமாவு, உப்பு, சீரக துாள், ஓரெகானோ, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு விழுது, சிறிதாக நறுக்கிய கொத்துமல்லி தழையை சேர்த்து, நன்றாக பிசையவும். இந்த கலவையை சிறு, சிறு உருண்டைகளாக்கி நடுவில் கட்டை விரலை வைத்து, லேசாக அழுத்தவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும். மாலை நேர டிபனுக்கு ஏற்றது. கடலை மாவுக்கு பதிலாக அரிசி மாவும் பயன்படுத்தலாம். எண்ணெயில் பொரிக்க விரும்பாதவர்கள், தோசைக்கல்லில் எண்ணெய் தடவி கட்லெட் போன்றும் செய்யலாம் - நமது நிருபர் - .