| ADDED : டிச 06, 2025 05:29 AM
l இட்லிக்கு மாவு அரைக்கும் போது, ஒரு கைப்பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மெதுவாக இருக்கும். l சிக்கன் குழம்பு செய்யும் போது, இறுதியாக தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து குழம்பில் ஊற்றினால், குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். l சின்ன வெங்காயத்தை சுடுதண்ணீரில் போட்டு வைத்த பின், அவற்றின் தோல்களை எளிதாக உரிக்கலாம் l கீரை சமைக்கும் போது, மண் பாத்திரத்தில் சமையல் செய்வது உடலுக்கு நல்லது. l அப்பளம் நமத்து போனால், அதை சிறு துண்டுகளாக வெட்டி வாணலியில் போட்டு இரண்டு நிமிடம் வதக்கினால் அப்பளம் மீண்டும் மொறு, மொறுவென மாறி விடும் l முட்டையை வேக வைத்த பின், அவற்றை குளிர்ந்த நீரில் போட்டால் மஞ்சள் கரு நிறம் மாறாமல் இருக்கும். l தோசையின் மீது கறிவேப்பிலை பொடியை போட்டு தோசை சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். l பருப்பு வேகவைக்கும் போது, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேகவைத்தால் பருப்பு மணமாக இருக்கும். l வாழைத்தண்டு பொரியல் செய்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், குடல் பகுதிக்கு நல்லது. l தக்காளி சாதம் செய்யும் போது, எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.