உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / அறுசுவை பக்கம்

அறுசுவை பக்கம்

- நமது நிருபர் - எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு புதினா இலைகள் சேர்த்தால் ஜூஸின் வாசனை அதிகமாகும்.முளைகட்டிய கொண்டைக்கடலை அரைத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். அதே சமயம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும். தோல் உரித்த உருளைக்கிழங்குகளில் சில துளிகள் வினிகரை தெளித்து குளிர்பதன பெட்டியில் வைத்தால் கெடாமல் இருக்கும்.அடை, வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், இரண்டு ஸ்பூன் சோள மாவு சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாகிவிடும். மோர்க்குழம்பு செய்யும்போது, அன்னாசி பழ துண்டுகளை சேர்த்தால் சுவை மேலும் கூடும் சாம்பாரில் கொஞ்ம் வறுத்த கசகசாவை சேர்த்தால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.இட்லி மாவில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து அவித்தால், இட்லி மிருதுவாக இருக்கும் சமைக்கும்போது குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், தேங்காய் பால் சேர்த்தால் காரம் குறைந்துவிடும். சாம்பார் செய்ய துவரம்பருப்பை வேகவைக்கும்போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்ததால் சாம்பார் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். அரிசி மாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்த பிறகு முறுக்கு, தட்டை செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை