மேலும் செய்திகள்
பச்சை மிளகாய் காளான் கிரேவி
11-Oct-2025
பள்ளி செல்லும் குட்டீஸ்களுக்கு, தினமும் மதிய உணவு தயாரித்து கொடுப்பதே, அம்மாக்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். என்ன உணவு தயாரிப்பது என, மண்டையை குடைந்து கொள்வர். அரை மணி நேரத்தில் 'யம்மி கார்ன் புலாவ்' செய்யலாம். ட்ரை பண்ணுங்கள். செய்முறை முதலில் அரிசியை கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சீரகம், பிரிஞ்சி இலை, ஜாதிப்பத்திரி போட்டு நறுமணம் வரும் வரை வறுக்கவும். அதில் மெல்லியதாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை போடவும். அதன்பின் இஞ்சி பேஸ்ட், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வறுக்கவும். அதன்பின் ஸ்வீட் கார்ன், சிறிதாக நறுக்கிய குடமிளகாய், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இதில் அரிசி, எலுமிச்சை ரசத்தை சேர்த்து நன்றாக கலந்து பாத்திரத்தை மூடி வைக்கவும். 20 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கொத்துமல்லி தழையை போட்டு அலங்கரித்தால், சுவையான யம்மி கார்ன் புலாவ் தயார். விருப்பம் உள்ளவர்கள், கேரட், பீன்சும் சேர்த்து கொள்ளலாம். இதை தயாரிக்க அதிகம் கஷ்டப்பட தேவையில்லை. அதிகபட்சம் அரை மணி நேரம் போதும். குட்டீஸ்களுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம். விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்தான பொருட்களை சேர்ப்பதால், அவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. - நமது நிருபர் -
11-Oct-2025