உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / வெளிநாட்டவரை கவரும் சிற்பக்கலை குடில்

வெளிநாட்டவரை கவரும் சிற்பக்கலை குடில்

மைசூரு நகர், சுற்றுலா பயணியருக்கு விருப்பமான நகரம் என்பதில், மாற்றுக் கருத்தே இல்லை. இங்குள்ள சிற்பக்கலை அருங்காட்சியகம், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணியரை தன் வசம் ஈர்க்கிறது.கலாசார நகர், அரண்மனை நகர் என, அழைக்கப்படும் மைசூரு ஓவியக்கலை, சங்கீதம், நடனம், சிற்பக்கலைக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள கலை, பாரம்பரியம், நமது மாநிலத்தின் மக்களை மட்டுமின்றி, வெளி நாட்டவரையும் கவர்ந்துள்ளது.மைசூரின் கலாசாரத்தை, கலைகளை ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள சிற்பக்கலை குடில் என்ற, சிற்பக்கலை பயிற்சி மையம், மக்களை வெகுவாக கவர்கிறது.பிரான்ஸ் நாட்டை மைனீஸ் என்ற பெண், சுற்றுலாவுக்காக மைசூருக்கு வந்தார். இங்குள்ள சிற்பக்கலையை கண்டு வியப்படைந்தார். இந்த கலையை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், மைசூரிலேயே தங்கியுள்ளார். மைசூரின் சிற்பக்கலை பயிற்சி மையத்தில், சிற்பக்கலை பயிற்சி பெற்று வருகிறார்.மைனீஸ் டாக்டரேட் பட்டம் பெற்றவர். மைசூருக்கு வந்த இவர், சிற்பக்கலை பயிற்சி மையத்துக்கு வந்தார். இங்கிருந்த கலை சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் பெற்றிருந்தன. சிற்பக்கலை பற்றி அறிந்து கொண்டார். இதை கற்க முடிவு செய்தார். தினமும் பயிற்சி மையத்துக்கு வந்து, பயிற்சி பெறுகிறார். இவருக்கு பிரபல சிற்பக்கலைஞர் சூர்ய பிரகாஷ், கலை நுணுக்கங்களை கற்றுத் தருகிறார்.இப்போது மைனீஸ் சிற்பக்கலைஞராக மாறியுள்ளார். சிற்பக்கலையில் நாளுக்கு நாள் தன் திறமையை வளர்த்துக் கொள்கிறார். மைனீஸ் மட்டுமல்ல, 25க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பெண்கள் சிற்பக்கலையை கற்று வருகின்றனர். இவர்களிடம் கட்டணம் பெறாமல், இம்மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.பொதுவாக நம்மவர்களுக்கு, அற்புதமான சிற்பக்கலையின் பெருமை, மகத்துவம் தெரிவது இல்லை. இதை கற்கவும் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் வெளி நாட்டு பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் சிற்பக்கலை கற்று வருவது மகிழ்ச்சியான விஷயம். பிரான்ஸ் நாட்டின் மைனீஸ், நாடகக்கலையிலும் சிறந்து விளங்குகிறார்.சிற்பக்கலை மையத்தில், பல விதமான சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. ஜெயசாம ராஜேந்திர உடையார், சிவன், பார்வதி, விநாயகர், கிருஷ்ணர் சிலைகள், கோவில்களுக்கு தேவையான சிற்பங்கள், முக்கிய புள்ளிகள், தேச தலைவர்கள் உட்பட, பலரின் சிலைகள் செதுக்கப்படுகின்றன.வெளிநாட்டவர்க்ள இங்கு வந்து, சிற்பக்கலையை கற்றுக் கொள்வது மைசூரின் பெருமையை உயர்த்துகிறது. சூர்ய பிரகாஷ் போன்ற கலைஞர்களால், சிற்பக்கலை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது. மைசூரின் உலக அளவில், கொண்டு சேர்க்கிறது.-நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ