பெண்கள் சிரித்து பேசி மகிழ நம்ம கட்டே
பெங்களூரு, லிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் ஆன்டனி. இவர் தன் வீட்டின் முற்றத்தில் பெண்கள் வந்து படிப்பதற்கு ஏதுவான வகையில், மாற்றம் செய்து உள்ளார். இதற்கு 'நம்ம கட்டே' என பெயரிட்டு உள்ளார். இங்கு இல்லத்தரசிகள், ஐ.டி.,யில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என பல பெண்கள், மாலை நேரங்களில் வந்து உரையாடுவர்.இங்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதுமட்டுமின்றி, இங்கு வருவோர் தங்கள் இயல்பான குணத்திலே இருக்க வேண்டும். மாறாக, அன்னிய இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர கூடாது.இங்கு வருவோர் தாராளமாக பேசி, சிரித்து மகிழலாம். மனதில் உள்ள அழுத்தங்களை போக்கும் வகையில் இருக்கிறது இந்த நம்ம கட்டே. அந்த இடத்தில், ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஊஞ்சலில் விளையாடி கொண்டே, பேசி மகிழலாம்.இது போன்று கலாசாரம், பெங்களூரில் அதிகரித்து வருகிறது. சில ஐ.டி., ஊழியர்கள், மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் பெண்கள் தங்கள் வீட்டின் முற்றத்தில், மாடியில் உள்ள காலி இடங்களை, பெண்கள் வந்து உரையாற்ற ஏதுவான வகையில் வடிவமைத்து உள்ளன.சிலரின் வீடுகளில், புத்தகங்கள், தங்கள் கலை திறமைகளை வெளிப்படுத்த ஏதுவான வகையில் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற இடங்களுக்கு, தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. இது போன்ற இடங்களுக்கு சென்று பெண்கள் பலரும் இளைப்பாறுகின்றனர்.