உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / காகங்களுக்கு உணவளிக்கும் மாமனிதன்

காகங்களுக்கு உணவளிக்கும் மாமனிதன்

ஹிந்து மத நம்பிக்கை படி, நம் முன்னோர்கள் காகங்களாக வாழ்ந்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், அமாவாசை நாட்களில், காகங்களுக்கு உணவு அளித்த பின் சாப்பிடுவதையே வழக்கமாக வைத்து உள்ளனர். இப்படிப்பட்ட காகங்களுக்கு தினமும் உணவளிக்கும் உன்னதமான மனிதரை பற்றி அறிந்து கொள்வோமா.

அன்பினிலே

மங்களூரு பொக்கபட்னாவில் உள்ள 'அப்பாக்கா குயின் குரூஸ்' ஹோட்டலில் பணிபுரிபவர் ஜெய நாராயண பூஜாரி. இவர் மனிதன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஒவ்வொரு உயிரிடத்திலும் அன்பு காட்டுவதை வழக்கமாக வைத்து உள்ளார். இவர், ஒரு நாள் மதிய வேளையில் காகங்கள் ஒன்றாக சேர்ந்து கரைந்து கொண்டிருப்பதை பார்த்து உள்ளார். காகங்கள் பசியோடு இருப்பதை புரிந்து கொண்டார்.அப்போது, தான் சாப்பிடாமல் முதலில் ஒரு தட்டில் சாப்பாடு போட்டு, குழம்பு ஊற்றி, தொடு கறி என வாடிக்கையாளருக்கு பரிமாறுவது போல எடுத்து வந்தார். ஆனால், அவரை பார்த்த போது, காகங்கள் அனைத்தும் பறந்து சென்று விட்டன. காகங்களின் பயத்தை புரிந்து கொண்ட அவர், சாப்பாடு வைத்து விட்டு, அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இதையடுத்து, காகங்கள் வந்து சாப்பிட்டன. இதை பார்த்த, அவரது மனம் நிறைந்தது.

அனைவரும் வாழ்த்து

இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அன்றிலிருந்து, இன்றுவரை தினமும் காகங்களுக்கு உணவு அளித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் காகங்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்து உள்ளார்.தற்போது, அவர் வருவதை பார்த்தே காகங்கள் வரத்துவங்குகின்றன. அவரும், அதற்கு ஏற்றாற் போல தட்டில் கரண்டி வைத்து, சத்தம் எழுப்புகிறார். இந்த சத்தத்தை கேட்டு, காகங்கள் கூட்டம் கூட்டமாக வரத்துவங்கின. இவரின் செயலை துவக்கத்தில் விமர்சித்த, உள்ளூர் வாசிகள் தற்போது அவரை வாழ்த்தி வருகின்றனர்.இது குறித்து, ஜெய நாராயணா கூறியதாவது:நான் ஐந்து ஆண்டுகளாக காகங்களுக்கு உணவு வழங்கி வருகிறேன். துவக்கத்தில், காகங்கள் வரவில்லை. பிறகு, சிறிய அளவில் வரத்துவங்கின. தற்போது, 100க்கும் மேற்பட்ட காகங்கள் வருகின்றன. அந்த காகங்கள் சாப்பிட்டுவிட்டு, 'கா..கா.. என கரையும் போது' மனம் நிம்மதி அடைகிறது. இந்த பணியை என் ஆயுட்காலம் வரை தொடர்வேன்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ