உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  பசுக்களுக்கு சேவை செய்யும் இளைஞர்கள்

 பசுக்களுக்கு சேவை செய்யும் இளைஞர்கள்

- நமது நிருபர் - இன்றைய காலகட்டத்தில் மனித நேயம் என்பதே, காணாமல் போய்விட்டது. ஆட்கள் விபத்தில் அடிபட்டு, உயிருக்கு போராடினாலும், அதை வீடியோவில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்ஸ் வாங்குவதில் தான், பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய நிலையிலும், பசுக்களின் மீது அக்கறை காட்டும் இளைஞர்கள், மனித நேயம் இப்போதும் உயிருடன் உள்ளது, மரித்து போகாவில்லை என்பதை நிரூபிக்கின்றனர். பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவில் வசிக்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதில், 30 இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் பசுக்களின் நலனுக்காக பணியாற்றுகின்றனர். சாலைகளில் காயமடைந்து பரிதவிக்கும் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சமீபத்தி ல், அதானி நகரின் சாலை ஓரத்தில், ஒரு பசு வயிற்று வலியால் அவதிப்பட்டு கீழே விழுந்து கிடந்தது. எழுந்து நிற்கவும் முடியவில்லை. இதையறிந்த இளைஞர்கள் உடனடியாக அங்கு சென்றனர். பசுவுக்கு குடிநீர் புகட்டி, முதலுதவி செய்து பராமரித்தனர். அதன்பின் டாக்டரை வரவழைத்து பசுவுக்கு சிகிச்சை அளிக்க வைத்தனர். சிகிச்சைக்கு பின், பசு உடல் நலம் தேறி எழுந்து நின்றது. இளைஞர்கள் குழுவினர் பசுக்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, சாலையில் அலையும் பசுக்களுக்கு குடிநீர், தீவனம் வழங்குவது, விபத்தில் சிக்கி காயமடைந்த பசுக்களை கால்நடை மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற சேவையிலும் ஈடுபடுகின்றனர். எந்த எதிர்பார்ப்பும், பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்தச் சேவையை செய்கின்றனர். பெலகாவி நகரில் சாலைகளில் அலையும் பசுக்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பொதுமக்களும் உள்ளாட்சிகளுடன் கைகோர்க்க வேண்டும் என்பதை, மக்களுக்கு உணர்த்துகின்றனர். வாயில்லா ஜீவன்களுக்காக சேவை செய்யும் இவர்களை, பொதுமக்கள் பாராட்டுகின்றனர். பணிச்சுமை, குடும்ப நிர்வகிப்பு பொறுப்புக்கு இடையிலும், இளைஞர்கள் குழுவினர், பசுக்களுக்கு சேவை செய்ய நேரம் ஒதுக்குகின்றனர். இவர்களின் சேவையை பார்க்கும் போது, மனித நேயம் மரித்து போகவில்லை; இன்னும் உயிரோடு தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை