உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / அழகு / பாடாய்படுத்தும் பொடுகு தொல்லை: இயற்கையாக தீர்வு இருக்கு..!

பாடாய்படுத்தும் பொடுகு தொல்லை: இயற்கையாக தீர்வு இருக்கு..!

ஆண், பெண் என பாலரும் சந்திக்கும் பெரும்பாலான பிரச்னைகளில் ஒன்று முடி உதிர்தல். முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டாலும், பொடுகு தொல்லை முக்கிய காரணமாக உள்ளது. பொடுகு தொல்லையால், அரிப்பு, எரிச்சல் உள்ளிட்டவை உருவாகும். குளிர்காலங்களில் பொடுகு தொல்லை என்பது அதிகமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு முதல் நாம் பயன்படுத்தும் ரசாயன பொருட்களின் எதிர்வினை என பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம். பெண்களுக்கு பொடுகு தொல்லை சற்று அதிகமாக இருக்கும். இயற்கை பொருட்களை பயன்படுத்தி முழுமையாக தீர்வு காணலாம்.

தேன்

எலுமிச்சையில் பொடுகை விரட்டும் பண்பு அதிகம் உள்ளதால், எளிதில் போக்கும். 2 அல்லது 3 ஸ்பூன் தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையில் மாஸ்க் போன்று அப்ளை செய்ய வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் கழுத்து சுத்தமான குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையும். இதை வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மாதத்திற்கு 5 முறை செய்தால் சிறந்த பலனிளிக்கும்.

தேங்காய் எண்ணெய்

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் வறட்சியை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு சேர்த்து உச்சந்தலையில் தடவிய பின் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு ஷாம்பூ கொண்டு தலை முடியை அலச வேண்டும். வேம்பு மற்றும் தேங்காய் எண்ணெய்யின் நற்குணங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

தயிர்

குளிர்காலத்தில் பொடுகு போக்குவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து அதனை உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு தலையை அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் பொடுகு தொல்லை விரைவில் நீங்கும். குளிர்காலங்களில் தலைமுடியைக் அலசுவதற்கு மிதமான அளவே சூடாக இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை