மேலும் செய்திகள்
உதடு வறண்டிருந்தாலும் மேட் லுக் மிஸ் ஆகாது
31-May-2026
கவர்ந்திழுக்கிறாள் இந்த பச்சைக்கண் பெண்!
09-May-2026
அழகாக தோற்றமளிக்க யாருக்கு தான் பிடிக்காது?. இதில் பெண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ஆண்களும் சரும பராமரிப்பில் இப்போது அக்கறை செலுத்துவது ஆரோக்கியமான போட்டி தானே. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு, சருமத்தையும் அழகாக வைத்திருக்க பெண்களை விட சற்று சிரமப்படுவது உண்மை தான். ஏனெனில், பெண்களை விட அதிகம் வெளியே சுற்றுவது ஆண்களாக இருப்பதும் ஒரு காரணம். பொதுவாக, ஆண்களுக்கு சருமத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனை சரி செய்து, தெளிவான சருமத்தை பெறுவதற்கு உதவும் சிறந்த மூன்று ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.பளபளப்பான சருமத்திற்கு ஃபேஸ் பேக்
ஆண்கள் நேரடியாக வெயிலில் சென்று விட்டு திரும்பும்போது அவர்களது சருமம் கறுப்பாகவும், எளிதில் பழுப்பு நிறமாகவும் மாறிவிடுகின்றது சருமம் மீண்டும் பளபளப்பாக ஜொலிக்க இந்த ஃபேஸ் பேக் உதவக்கூடும். முட்டை வெள்ளை கரு ஒன்று, அரை கப் காப்பித்தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் தேவை. இவற்றையெல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை காயவைத்த பின்னர் குளிர்ச்சியான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.முகப்பருவை போக்கும் ஃபேஸ் பேக்
31-May-2026
09-May-2026