முகத்தைப் பொலிவாக்க பாலாடை பயன்படுத்துங்க...
காய்ச்சிய எருமைப் பாலில் மஞ்சள் நிறத்தில் ஆடை கட்டும். இதனை எடுத்து சாப்பிட யாருக்குத்தான் ஆசை இருக்காது? பால் ஆடை ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஓர் உணவுப் பொருள். வளரும் இளம் குழந்தைகளுக்கு பால் ஆடைக் கட்டி பலவித நன்மைகளைச் செய்கிறது. பால் ஆடை சாப்பிட மட்டுமல்ல, சருமத்தை பாதுகாக்கவும் அழகு சிகிச்சை முறையி பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தையும் சருமம் வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது. பாலாடையை எடுத்து முகத்தில் தடவும்போது சருமம் மிருதுவாகும். இந்த பாலாடைக்கட்டியில் புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. ஆண், பெண் ஆகிய இருபாலருமே பாலாடை அழகு சிகிச்சை செய்துகொள்ளலாம். பாலாடை மூலம் முகத்தின் அழகைப் பராமரிப்பது எப்படி எனப் பார்ப்போம். பால் ஆடை வறட்சியால் ஏற்படும் சிவத்தல் மற்றும் நமைச்சலை சமாளிக்க உதவுகிறது. தோல் சுருக்கங்கள் உள்ளிட்ட வயதாவதன் அறிகுறிகளை தாமதப்படுத்தவும் உதவுகிறது. முகத்தை பாலாடைக்கட்டி மூலம் மசாஜ் செய்வது இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகளை வழங்கும். உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும்.