உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / நிகழ்வுகள் / கனவு தமிழ்நாடு சார்பில் மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி!

கனவு தமிழ்நாடு சார்பில் மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி!

மாணவ, மாணவிகள் இடையே செஸ் போட்டி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் சென்னை குன்றத்தூரில் ட்ரீம் தமிழ்நாடு வழங்கும் மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி அக்டோபர் முதல் தேதி அன்று நடக்கிறது. 'கனவு தமிழ்நாடு'ஒத்தக் கருத்துடைய தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள், சூழலியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டுத் தலைமைகளால் வழிநடத்தப்படும் இயக்கம். இவ்வியக்கம் சார்பில், போரூர் கிரியேட்டிவ் மற்றும் ஏ.ஆர்.எஸ்., செஸ் அகாடமிஸ் ஏற்பாட்டில் மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி நடக்க உள்ளது.இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவின் 28வது கிராண்ட் மாஸ்டரான, வெங்கடேஷ் அழைக்கப்பட்டுள்ளார். இடம்: கார்த்திக் பேலஸ், குன்றத்தூர், சென்னைநாள்: 01.10.2023


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி