மேலும் செய்திகள்
பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி
09-Sep-2025
மேக்கப் போட்டிருப்பது போல் தெரியாத, ஒரு 'மினிமல் மேக்கப்' தோற்றம்தான், இன்றைய இளம்பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள டிரெண்ட் என்கிறார், அழகுக்கலை நிபுணர் ரம்யா. அவர் கூறியதாவது: இயற்கையான அழகை முன்னிலைப்படுத்தும், இந்த மினிமல் மேக்கப் தோற்றத்தை எளிதாகப் பெற அதிக பவுண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்த்து, அதற்கு பதிலாக 'டிண்டட் சன்ஸ்கிரீன்' அல்லது எஸ்.பி.எப். கலந்த 'ஸ்கின் டின்ட்' போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். இது உங்கள் சருமத்திற்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதோடு, ஒரு சீரான நிறத்தையும் உடனடிப் பொலிவையும் தரும். கவனம் தேவை
ஐப்ரோ பென்சில் கொண்டு, உங்கள் புருவங்களில் இருக்கும் இயற்கையான இடைவெளிகளை மட்டும் லேசாக நிரப்பினால் போதும். இது உங்கள் முகத்திற்கு ஒரு நேர்த்தியான, 'கிளாசிக்' தோற்றத்தை தரும். புருவங்களை பிரேம் செய்யுங்கள், புதிதாக வரைய வேண்டாம் என்பதே முக்கியம். இதை பின்பற்றி, நீங்களும் 'நோ மேக்கப்' மேக்கப் லுக்கில் இயற்கையாகவும், அழகாகவும் ஜொலிக்கலாம்' என்கிறார்.
கருப்பு நிற ஐ-லைனருக்கு பதிலாக, 'பிரவுன்' நிற ஐ-லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்துங்கள். கருப்பு நிறம் கண்களை 'போல்டாக' காட்டும். பிரவுன் நிறமோ உங்கள் கண்களுக்கு இயற்கையான அழகை அளிக்கும். அதன் மேல் ஒரு கோட் மஸ்காரா பயன்படுத்தும்போது, கண்கள் தெளிவாக, முகம் அழகாக மிளிரும்.
உதடுகளுக்கு பயன்படுத்தும், 'லிப் டின்ட்'- ஐ கன்னங்களுக்கு 'பிளஷ்' ஆகவும், கண் இமைகளுக்கு 'ஐ ஷேடோ' ஆகவும் பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்திற்கு, ஒருசேர புத்துணர்ச்சியான, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும். தனித்தனியாக பல பொருட்களைப் பயன்படுத்தத் தேவையில்லை.
09-Sep-2025