கணையத்தைப் பாதுகாக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க..!
நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவது இன்சுலின் திரவம். இது உடலின் கணையம் என்கிற பகுதியில் சுரக்கிறது. கணையம், முக்கியமான நொதிகள், ஹார்மோன்களைத் தயாரிக்கிறது. ரத்தவோட்டத்தில் முக்கியமான திரவங்களைச் சேர்க்கிறது. கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சில உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். அவை என்னென்ன, அவற்றில் உள்ள சத்துகள் என்னென்ன எனப் பார்ப்போமா?பூண்டில் உள்ள அல்லிசின், கணையத்தின் ஆரோக்கியம் மேம்படவும் புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள சல்பர், அர்ஜினைன், ஒலிகோசகரைடுகள், ஃபிளாவனாய்டுகளின், செலினியம் போன்றவை கணையத்தின் திசுக்களில் நேர்மறை தாக்கங்களை உண்டாகச் செய்கின்றன. சிவப்பு திராட்சையில் ரெஸ்வெரடால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்தநாளங்கள் சேதம் அடையாமல் காக்க உதவும்.