உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / கண்கட்டி வருவதற்கான காரணம்-தவிர்க்க வேண்டியவை!

கண்கட்டி வருவதற்கான காரணம்-தவிர்க்க வேண்டியவை!

இமைகளின் ஓரத்தில் பாக்டீரியா தொற்று மற்றும் அழுக்குகள் சேர்வதால், கண் ஓரத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு கண் கட்டி உருவாகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் தொற்றாகும்.

அறிகுறிகள்

கண்களிலிருந்து அதிகம் நீர் வடிதல், கண்கள் சிவந்து போதல்,இமைகளின் ஓரத்தில் பரு போன்று கட்டி உருவாகுதல், கண்களில் அதிகளவு வலி, இமைப்பதற்குச் சிரமம் போன்றவை அறிகுறிகளாகும்.

காரணங்கள்

கண்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், அழுக்கு, தூசி போன்றவை படிந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதிகளவில் மேக்கப் மற்றும் ரசாயனப் பொருட்களைக் கண்களுக்குப் பயன்படுத்துவதால் வரலாம்.கைகளைச் சுத்தம் செய்யாமல் அடிக்கடி கண்களைத் தொடுவதால், கிருமித் தொற்று ஏற்பட்டுக் கண்கட்டி உருவாக வாய்ப்புள்ளது.

சிகிச்சை முறைகள்

ஆரம்பக் கால தொற்றுக்கு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான வெப்பம் மூலம் கட்டி உள்ள இடத்தில், ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தற்காலிகமாகத் தீர்வளிக்கும்.இது ஒரு தொற்று நோய் என்பதால், அடிக்கடி வரும் பட்சத்தில் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் நிரந்தரமாகக் குணப்படுத்தலாம்.மருத்துவரின் ஆலோசனை பேரில் சரியான சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம்.கண்கட்டிக்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால், மற்ற பகுதிகளுக்குத் தொற்று பரவி புண் மற்றும் வடுக்களை உருவாக்கி பார்வை திறனைப் பாதிக்கக் கூடும். இதனால் முறையான சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.

தவிர்க்க வேண்டியவை

கண்கட்டி இருக்கும் போது காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.தொற்று சரியாகும் வரை கண்களுக்கு மேக்கப் போடுவதை நிறுத்த வேண்டும்.கண்களைத் தொட ஆசையாக இருந்தாலும், சுத்தமில்லாத கைகளைக் கொண்டு தொடுவதால் தொற்றின் வேகம் அதிகமா இருக்கும்.ஒருவருக்குக் கண்கட்டி இருந்தால், அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை