உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  500 ஆண்டுகள் பழமையான நாகரா கோட்டை

 500 ஆண்டுகள் பழமையான நாகரா கோட்டை

- நமது நிருபர் - ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரா தாலுகாவின் பீதனுாரின் நாகரா கிராமத்தில் அமைந்து உள்ளது 500 ஆண்டுகள் பழமையான நாகரா கோட்டை. 15 61ல் கீழடி ராஜ்ஜியத்தின் வீரபத்ரா நாயகாவால் கட்டப்பட்டது. இதனை 'பீதனுார் கோட்டை அல்லது சிவப்பா நாயகா கோட்டை' என்றும் அழைக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான கோட்டைகள் எதிரிகள் எளிதில் உள்ளே நுழையாத வகையில் மலைகள் மீதும், கோட்டையை சுற்றிலும் தண்ணீர் இருக்கும்படி கட்டப்பட்டிருக்கும். ஆனால் நாகரா கோட்டை, சில மீட்டர் உயரம் உள்ள இடத்தில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோட்டைக்குள் கோவில், சிறிய குளம், கண்காணிப்பு கோபுரம், தானிய களஞ்சியங்கள் சேமிக்கும் பகுதி, தார்பார் அரங்கம் இருந்ததற்கான அடையாளங்களை காணலாம். கடந்த 1639ல், மன்னர் சிவப்பா நாயகாவின் ஆட்சி காலத்தில், பீதனுார் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. பீதனுார் அரசியலி ன் மையமாக திகழ்ந்தது. அவருக்கு பின் 1763ல் பீதனுாரை ஹைதர் அலி கைப்பற்றினார். பீதனுாரை, ஹைதர் நகரா என பெயர் மாற்றம் செய்தார். கோட்டைக்குள் பல மாற்றங்களை செய்தார். இருப்பினும் மைசூரு போரின் போது ஏற்பட்ட தீ விபத்தால், கோட்டை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான், தனது ஆட்சி காலத்தில் இந்த தலைநகரை புனரமைத்தார். ஆனாலும் இந்த இடம் படிப்படியாக கைவிடப்பட்டது. தற்போது இதனை, நாகரா கோட்டை என்று அழைக்கின்றனர். சாகர் - ஹொசநகர் சாலையில் செல்லும் போது இந்த கோட்டையை காணலாம். இந்த கோட்டை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சுற்றி உள்ள பகுதிகளை பார்க்கலாம். பசுமையால் சூழப்பட்ட இந்த கோட்டை, பருவமழை காலங்களில் மிகவும் அழகாக காட்சி அளிக்கும். எப்படி செல்வது?  விமானத்தில் செல்வோர் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 103 கி.மீ., தொலைவில் உள்ள கோட்டைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  ரயிலில் செல்வோர், சாகரா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 57 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  பஸ்சில் செல்வோர், சாகரா பஸ் நிலை யத்தில் இறங்கி, அங்கிருந்து 57 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சி யில் செல்லலாம்.  அருகிலுள்ள மற்ற சுற்றுலா தலங்கள்: கொல்லுார் 46 கி.மீ., காவலே துர்கா 27 கி.மீ., கொடசாத்ரி மலை 30 கி.மீ., ஜோக் நீர்வீழ்ச்சி 90 கி.மீ., ஆகும்பே 60 கி.மீ., நாகரா கோட்டை. (அடுத்த படம்) கோட்டைக்குள் செல்வதற்கான நுழைவு வாயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை