உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  உடுப்பியில் ஒரு பிச்சாவரம்

 உடுப்பியில் ஒரு பிச்சாவரம்

- நமது நிருபர் -: தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சாவரம், உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகளை கொண்டுள்ளதால், இங்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருக்கும். சதுப்பு நிலம் என்பது கடலும், நிலமும் சந்திக்கும் முகத்துவார பகுதியில், உப்பு நீரில் வளரக்கூடிய அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாகும். அதுபோல, உடுப்பி மாவட்டம் ஆன்மிகம், கடற்கரைகள், தீவுகள், பவளப்பாறைகள், ஆற்றின் முகத்துவாரங்கள், சதுப்பு நிலக்காடுகளுக்கு பெயர் பெற்றது. இங்கும் ஒரு, பிச்சாவரம் அமைந்து உள்ளது. இது, பெரும்பாலான சுற்றுலா பயணியருக்கு தெரிவதில்லை. உடுப்பியின் கோடிஹோல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பரம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நில காடுகளை காணலாம். இந்த மரங்கள், கடலோர காவலர்களாக செயல்படுகின்றன. அவற்றின் அடர்த்தியான வேர் அமைப்புகள், ஆறுகள், நிலத்தில் இருந்து அடித்து வரப்படும் வளமான வண்டல் மண்ணை தடுத்து, அது, கடலுக்குள் அடித்து செல்லப்படுவதை தடுக்கின்றன. சதுப்பு நில காடுகளில் வசிக்கும் பறவையை காண பலரும் இங்கு வருகின்றனர். இவர்களில் சிலர் இடுப்பளவு தண்ணீரில் நடந்தும் செல்கின்றனர். சிலர் துடுப்பு படகில் சென்று பார்வையிடுகின்றனர். புகைப்பட கலைஞர்களின் சொர்க்கம் என்று கூறலாம். எப்படி செல்வது? விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 80 கி.மீ., பஸ், டாக்சியில் செல்லலாம். ரயிலில் செல்வோர், பர்கூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள பரம்பள்ளிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். சாலிகிராமா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kumar
ஜூன் 13, 2026 21:55

முக்கியத்துவம் வாய்ந்த பிச்சாவரம் சுற்றுலா பகுதியை நமது அரசும் சுற்றலா துறையும் மிக கேவலமான நிலையில் வைத்துள்ளன . பயணிகளின் வாகனங்கள் நிறுத்த முறையாக அமைக்கப்பட்ட நிறுத்தும் இடம் இல்லை. சுகாதாரமான தரமான உன்கவகம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுகாதாரமான சரியாக பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள் இல்லை . இருக்கும் கழிப்பறைகள் சரியாக கழுவாததால் கால் வைக்கவே அருகதை இல்லாமல் இருக்கின்றன . எல்லா சுற்றுலா தலங்களுக்கும் இதே நிலை தான் .இவற்றை பராமரிக்க சிலரை வேலைக்கு அமர்த்தி மேற்பார்வை செய்துகொண்டு இருப்பது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு , பயணிகள் சுகாதாரத்தையும் இனிமையான அனுபவத்தையும் உறுதி செய்யும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை