மேலும் செய்திகள்
மலையேற்றத்துக்கு ஏற்ற துமகூரின் சின்னக பெட்டா
18-Sep-2025
மைசூரின் எச்.டி.கோட் தாலுகா குண்டூர் கிராமத்தில் உள்ளது, சிக்கதேவம்மா மலை. கர்நாடகாவில் உள்ள முக்கிய மலையேற்ற தலங்களில் இம்மலையும் ஒன்றாக உள்ளது. மலை உச்சியில் சிக்கம்மா தேவி கோவில் உள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் சிக்கம்மா தேவி கேரளாவில் இருந்து வந்தவர் என்றும், சாமுண்டீஸ்வரி தாயின் சகோதரி என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், சிக்க தேவம்மா மலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். மலை உச்சியில் இருந்து குண்டூர், அதை சுற்றியுள்ள கிராமங்களின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். விவசாய நிலங்கள், பரந்து விரிந்துள்ள நுகு நீர்த்தேக்கத்தையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிட்டும். அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு சாலை வளைந்து, நெளிந்து செல்கிறது. சாலையின் இருபக்கமும் பச்சை, பசலேன காட்சி அளிக்கிறது. கார், பைக்கில் சென்றால் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை மொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் யானை, சிறுத்தை, மான்கள் சாலையை கடக்கும் காட்சியை கண்டு ரசிக்கலாம். இது மிகவும் அரிதான வாய்ப்பு தான். அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு டிரெக்கிங் செல்லலாம். 4 கி.மீ., துாரம் உள்ளது. இதில் 200 மீட்டர் துாரம் செங்குத்தான பாதை. இப்பாதையில் மிகவும் கவனமாக ஏறிச்செல்ல வேண்டும். மற்ற இடங்களில் பாதை நல்ல நிலையில் இருப்பதால் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் மலை உச்சியை சென்றடையலாம். காலை 6:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை கோவில் நடைதிறந்திருக்கும். டிரெக்கிங் மாலை 5:00 மணியுடன் முடிகிறது. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு டிரெக்கிங் செல்ல ஏற்ற மாதங்கள். மலை உச்சியில் குறைந்த கடைகளே உள்ளதால், அங்கு செல்வோர் தேவையான உணவு, தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது. பெங்களூரில் இருந்து சிக்கதேவம்மா மலை 193 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. மைசூரில் இருந்து 52 கி.மீ., துாரத்தில் இருக்கிறது. பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து எச்.டி.கோட்டிற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எச்.டி.கோட் சென்று அங்கிருந்து டவுன் பஸ்களில் குண்டூர் கிராமம் செல்லலாம். ரயிலில் சென்றால் மைசூரு சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும். - நமது நிருபர் -
18-Sep-2025