உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / யாகச்சி அணையில் நீர் சாகச விளையாட்டு

யாகச்சி அணையில் நீர் சாகச விளையாட்டு

ஹாசன் மாவட்டம், பேலுாரில் அமைந்துள்ளது யாகச்சி அணை. கர்நாடகாவில் அழகான அணைகளில் இதுவும் ஒன்றாகும். சுற்றுலா செல்ல விரும்புவோர் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.மொத்தம், 1,280 மீட்டர் நீளம், 26 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை, ஹாசன், பேலுார், சிக்கமகளூரு மாவட்ட விவசாயம், மக்கள் குடிநீர் தேவைக்காக, 2001ல் பேலுாரில் யாகச்சி ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டது. இயற்கை அழகுடன் உள்ள அணையின் நிலப்பரப்பு, பார்வையாளர்களை மயக்கும்.அணையை பார்க்கவும், சுற்றியுள்ள இயற்கை கொஞ்சும் அழகை பார்க்கவும், பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நாள் விலகி, உங்களை மீண்டும் புத்துணர்ச்சி அடைய செய்ய, ஏற்ற இடம். இதற்காகவே, தினமும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.சமீபத்தில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், யாகச்சி அணையில், நீர் சாகச விளையாட்டை அரசு துவக்கி உள்ளது. இங்கு வாழைப்பழ படகு சவாரி, பயண படகு, வேகமாக செல்லும் படகு, கயாக்கிங் எனும் இருவர் மட்டும் துடுப்பு போட்டு செல்லும் படகு, ஜெட் ஸ்கீயிங் என பல்வேறு நீர்சாகச விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.இதற்கு சுற்றுலா பயணியர் இடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது. தினமும் காலை 7:00 முதல் மாலை 6:30 மணி வரை அணை திறந்திருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ