ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தில் குதிக்கும் ஆப்பிள்..! விரைவில் ஆப்பிள் ஏஐ வெளியீடு..!
சமீபகாலமாக கூகுளுக்கு பெரும் சவாலாக விளங்கும் செயற்கை நுண்ணறிவுத் தளம் சாட் ஜிபிடி. சாட் ஜிபிடியின் வருகையை அடுத்து கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தள ஆராய்ச்சியில் ஈடுபட்டது. கூகுளின் ஏஐ சாட்பாட் பார்ட், தற்போது கணினி பயனாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுவரும் நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்த ஏஐ கோதாவில் குதித்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் ஜிபிடி என்னும் ஏஐ தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் இந்த ஆப்பிள் ஜிபிடி ஆப்பிள் மின்னணுப் பொருள் பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஏஐ சாட் ஜிபிடி, பார்ட் போலவே வாய்ஸ் கமாண்ட் மூலம் செயல்பட்டு நமது தேவைகளை எளிதில் நிறைவேற்றும். மேலும் மின்னஞ்சல் தொகுப்பு, ரெஸ்யூம் தயாரிப்பு உள்ளிட்ட பல செயல்களைச் செய்யும்.