/ டெக்னாலஜி / ஸ்டார்ட்அப்கள் / ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான வசதியை மத்திய அரசு செய்துகொடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல்
ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான வசதியை மத்திய அரசு செய்துகொடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல்
ஸ்டார்ட்அப்20 என்ற மாநாடு குருகிராமில் நடக்கிறது. அதில் பேசிய மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வசதி வாய்ப்புகளை தான் மத்திய அரசு ஏற்படுத்துமே தவிர அவற்றை கட்டுப்படுத்தாது என கூறினார்.கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட்அப் அபரிமித வளர்ச்சி கண்டு வருகிறது. இந்திய இளைஞர்கள் தொடங்கும் ஸ்டார்ட்அப்களில் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். அவற்றில் பல நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்டதாகவும் விளங்குகின்றன.