/ டெக்னாலஜி / ஸ்டார்ட்அப்கள் / 2023ல் இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்அப் கூட 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை!
2023ல் இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்அப் கூட 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை!
2023ன் முதல் பாதி முடிந்திருக்கிறது. இந்த 6 மாதத்தில் இந்தியாவில் புதிய யூனிகார்ன் எதுவும் உருவாகவில்லை. அதாவது எந்த ஒரு புதிய ஸ்டார்ட்அப்பும் 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை. ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ஸ்டார்ட்அப்களில் செய்யப்படும் முதலீடு 70 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவைச் சந்தித்துள்ளது.கடந்தாண்டு இறுதியில் இருந்தே உலகளவில் பொருளாதார நிலைமைகள் சீராக இல்லாததால், முதலீட்டாளர்கள் பணத்தை ஜாக்கிரதையாக வெளியே எடுக்கத் துவங்கினர். அதன் தாக்கம் பங்குச்சந்தை மட்டுமின்றி ஸ்டார்ட்அப்களிலும் எதிரொலித்தது. இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் ஸ்டார்ட்அப்கள் 548 கோடி டாலரை மட்டுமே திரட்ட முடிந்தது. 2022ன் இதே காலக்கட்டத்தில் 1950 கோடி டாலரை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குவித்தன.