ஸ்பெயினில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான காலணிகள் கண்டுபிடிப்பு..!
ஸ்பெயியின் உள்ள குகையில் இருந்து, சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான ஒரு ஜோடி காலணியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் உள்ள அண்டலூசியாவில் வவ்வால் வசிக்கும் பழைய குகையில், புல்லில் தயாரான காலணி ஜோடியை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனை பகுப்பாய்வு செய்ததில் , காலணி 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.குகையை, முதன்முதலில் 1831ம் ஆண்டில் வவ்வால் எச்சங்களை உரமாக பயன்படுத்தி கொள்ள நில உரிமையாளர் தோண்டியுள்ளார். பின்னர் 1857ம் ஆண்டில் ஒரு சுரங்க நிறுவனத்தால், அடையாளம் காணப்படும் வரை, ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் குகையைத் தோண்டத் தொடங்கியபோது, பகுதியளவு மம்மியின் சடலங்கள், காட்டுப்பன்றி பற்கள் மற்றும் தனித்துவமான தங்க கிரீடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பை கண்டுபிடித்தனர். மீதமுள்ள 76 கலைப்பொருட்கள், தற்போது ஸ்பெயினில் உள்ள ஆய்வாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டன.