உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / உலகின் டாப் 10 அழகிய நூலகங்கள் பற்றி அறிவோமா ?

உலகின் டாப் 10 அழகிய நூலகங்கள் பற்றி அறிவோமா ?

1. அட்மோண்ட் அபே நூலகம் :ஆஸ்திரியாவில் உள்ள அட்மோண்ட் அபே நூலகம் உலகளவில் அழகான நூலகங்களுள் ஒன்றாகும். 1776ல் கட்டப்பட்ட இந்த நூலகம் 2. லைப்ரரி ஆப் காங்கிரஸ் :உலகின் மிகப்பெரிய நூலகமாக அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் விளங்குகிறது.

3. போட்லியன் நூலகம் :பிரிட்டனில் உள்ள போட்லியன் நூலகம், ஐரோப்பியாவில் பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். 1602ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நூலகத்தில், 14ம் நூற்றாண்டை சேர்ந்த பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.4. டிரினிட்டி கல்லூரி நூலகம் : அயர்லாந்தில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நூலகத்தில் அழகிய மரவேலைப்பாடுகள், புகழ்பெற்ற தத்துவ மேதைகளின் பளிங்கு உருவங்கள் பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருக்கும். 5. பைபிலியோடெகா வாஸ்கான்சிலோஸ் : மெக்ஸிகோவில் உள்ள பைபிலியோடெகா வாஸ்கான்சிலோஸ் நூலகம் இரும்பு சட்டகம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, தொங்கும் தோட்டம் போல புத்தக அலமாரிகள் மிதந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் இருக்கும். 6.ஸ்ட்ராஹோவ் மோனஸ்ட்ரி நூலகம் : செக் குடியரசில் உள்ள பிராகுவேயில் உள்ள ஸ்ட்ராஹோவ் மோனஸ்ட்ரி நூலகம், 1679ம் ஆண்டு கட்டப்பட்டது. 16ம் மற்றும் 18ம் நூற்றாண்டுக்கு மத்தியில் பதிக்கப்பட்ட பல புத்தகங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.7.பைபிலியோடெகா ஸ்டாடேல் : இத்தாலியில் உள்ள பைபிலியோடெகா ஸ்டாடேல் நூலகம், 1566ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நூலகத்தில் ஏராளமான பழமையும், புதுமையும் கலந்த கட்டடக்கலை அமைப்பில் அமைந்துள்ளது.8. தியாஜின் பின்ஹாய் நூலகம் :சீனாவில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் கோள வடிவில் ஆடிட்டோரியம், ஏராளமான கல்வி தொடர்பான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 9. ஸ்டாக்ஹோம் பொது நூலகம் : ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பொது நூலகம் 1928ம் ஆண்டு துவங்கப்பட்டது. எளிமை, நேர்த்தி மற்றும் செயல்பாட்டின் கலவையாக இந்த நூலகம் விளங்குகிறது.10. தமா ஆர்ட் பல்கலை நூலகம் :ஜப்பானில் அமைந்துள்ள இந்த நூலகம், குறைந்த இருக்கை, கண்ணாடி சுவர்கள் மற்றும் வளைவான கட்டட அமைப்புடன் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ