உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / இந்தியாவில் பொது கழிப்பிட வசதி மோசம் : சர்வேயில் தகவல்

இந்தியாவில் பொது கழிப்பிட வசதி மோசம் : சர்வேயில் தகவல்

இந்தியாவில் உள்ள நகரங்களில் பொது கழிப்பிடங்கள், இன்னமும் மோசமான நிலையில் இருப்பதாக சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 341 மாவட்டங்களில் பொது கழிப்பிடங்களில் சுகாதாரம் குறித்து லோக்கள் சர்க்கிள் சார்பில் சர்வே நடத்தப்பட்டது. சுமார் 39 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. சர்வேயில் பங்கேற்றவர்களில் 69 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 31 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். சர்வேயில் பங்கேற்றவர்களில், 47 சதவீதம் பேர் முதல் நிலை, 31 சதவீதம் பேர் இரண்டாம் நிலை மற்றும் 22 சதவீதம் பேர் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:-நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்களில், தங்களது நகரத்தில் உள்ள பொது கழிப்பிடங்கள் மேம்பட்டு இருப்பதாக 42 சதவீதம் பேரும், 52 சதவீதம் பேர் எந்தவொரு முன்னேற்றமும் இல்லையென தெரிவித்துள்ளனர்.சர்வேயில் பங்கேற்றவர்களில் 37 சதவீதம் பேர்,பொது கழிப்பிட வசதி சராசரியாக அல்லது சுமாராக இருப்பதாகவும், 25 சதவீதம் பேர் சராசரிக்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர், மோசமாக இருப்பதாவும், 12 சதவீதம் பேர் பொது கழிப்பிடம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், உள்ளே சென்று பயன்படுத்தாமல் வெளியே வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், மும்பை, டில்லி அல்லது பெங்களூரு போன்ற நகரங்களில், சுலப் இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் கழிப்பிடங்களை தவிர, மற்றவை கொடுங்கனவாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் புகார் கூறும் பிரச்னை என்னவெனில், தங்களின் நகரத்தில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் சுகாதாரம், தூய்மை மற்றும் பராமரிப்பின்மை குறித்ததாக இருக்கிறது. 68 சதவீதம் பேர், பொது கழிப்பிடங்களுக்கு பதிலாக வணிக நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.10 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் நகரத்தில் பொது கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பான்மையான அதாவது, 53 சதவீதம் பேர் அவை மோசமான அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும், சுமார் 37 சதவீதம் பேர், செயல்பாட்டில் இருந்தாலும், சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை