உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வேகமாகப் படித்து முடிப்பவர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வேகமாகப் படித்து முடிப்பவர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சுவாமி விவேகானந்தர் பற்றிய அரிய தகவல் ஒன்றை அவரது நினைவு நாளில் தெரிந்து கொள்வோம். 250 பக்க புத்தகத்தை கையில் எடுத்தால், நமக்கு படித்து முடிக்க இரண்டு மணி நேரம் வரை ஆகலாம். ஆனால், எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும், விவேகானந்தர் பத்தே நிமிடங்களில் முடித்து விடுவார். எப்படி தெரியுமா? முதலில் சில பக்கங்கள், கடைசியில் சில பக்கங்கள்...இதைக் கொண்டே, அந்த புத்தகத்தில் என்ன இருக்கும் என்பதைக் கிரகித்து விடுவார். அந்த புத்தகத்தின் எந்தப்பகுதியில் இருந்து கேள்வி கேட்டாலும், சரியான பதிலும் சொல்லி விடுவார். அவரது கல்வித்திறன் அத்தகையது. கல்வி குறித்து அவர் சொல்லியுள்ளவற்றை தெரிந்து கொள்ளுங்கள். * கல்வியை சிறந்த குணத்தை உருவாக்கவும், மன வலிமையை வளர்க்கவும், அறிவை விரியச் செய்யவும், உங்களை சொந்தக்காலில் நிற்க வைக்கவும் பயன்படுவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். * மனிதனுள் ஏற்கனவே இருக்கும் அறிவுத்திறனை வெளிப்படுத்துவதே கல்வி. * கல்வியின் நோக்கம் மனஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருக்க வேண்டும். வெறும் பாடங்களைப் படிப்பது கல்வி அல்ல. * ஆன்மிகக்கல்வி, உலக நடைமுறைக் கல்வி ஆகிய இரண்டையும் அடித்தளமாகக் கொண்டே நமது கல்வி அமைய வேண்டும்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ