13 ...ரொம்ப ரொம்ப நல்ல எண் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
13 என்ற எண்ணைப் பற்றிப் பேசினாலே, பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுபவர்களைத் தான் பார்த்திருக்கிறோம். தங்கள் வாகனங்களுக்கு கூட்டுத்தொகை 13 என வராமல் பார்த்துக் கொள்பவர்கள் ஏராளம். உண்மையில், 13 என்பது மிக நல்ல எண். ஸ்ரீராமரை வணங்கும் பக்தர்கள் அவருக்குரிய மந்திரமான ஸ்ரீராம ஜயராம ஜய ஜயராம என்பதை 108 முதல் லட்சத்து எட்டு முறை வரை சொல்வர். இந்த மந்திரத்திலுள்ள எழுத்துக்கள் என்னும் அட்சரங்களை எண்ணிப் பாருங்கள். கூட்டுத்தொகை 13 வரும். ஆனால், இந்த 13 எழுத்து மந்திரம் தான், ராம பக்தர்களுக்கு மிக மிக ஆறுதல் தரக்கூடியது. தொழிலில் வெற்றி வாகை சூட விரும்புவோர், இந்த மந்திரத்தை சொல்லியே ராமரை பிரார்த்திப்பர். சிவனுக்கும் இதே போல 13 மிகவும் பொருத்தமாகிறது. அவருக்குரிய ஸ்ரீருத்ரம் என்ற மந்திரத்தைச் சொல்லும் போது. சங்கர என்ற வார்த்தை 13 முறை வரும். இப்ப சொல்லுங்க...13ஐ ஒதுக்குவது சரியா...இல்லையா என்று. இறைவனுக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான். எல்லா எண்ணும் நல்ல எண் தான். எல்லாமே நல்லவையாகவே அவரது பார்வையில் படும். ஏனெனில், அனைத்தும் அவர் படைப்பே.