உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை ஆகஸ்ட் 3, ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா வருகிறது. காவிரக்கரையோர மக்கள் இதை விசேஷமாகக் கொண்டாடுவர். அவர்கள் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவர் வீட்டிலும், ஆடிப்பெருக்கு விழாவை எளிமையாகக் கொண்டாடலாம். ஆடிப்பெருக்கன்று காலை 8 மணிக்குள், பூஜை அறை அல்லது திருவிளக்கின் முன், ஒரு செம்பில் நல்ல தண்ணீர் வையுங்கள். அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரையுங்கள். சிறிது உதிரிப்பூக்களை அதன் மேல் போடுங்கள். கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா நதிகளையும் மனதில் எண்ணுங்கள். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் நைவேத்யம் செய்து, கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்டி, “எங்கள் மூதாதையர் உங்களைத் தெய்வமாய் கருதியது போல், எங்களுக்கும் அதே மனநிலையைத் தாருங்கள்,” என வேண்டுங்கள். உங்கள் குழந்தைகளை இந்த பூஜையில் பங்கேற்க வைத்து, அவர்களுக்கு தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். எந்நாளும் எங்கள் நதிகள் பெருகி ஓட வேண்டும் என உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டுங்கள். உங்களுக்கு ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி