உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நாக சதுர்த்தி விரதம் ஏன்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாக சதுர்த்தி விரதம் ஏன்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாக சதுர்த்தி விரதம் ஏன்? நாக சதுர்த்தி விரதம் ஏன்? இன்று நாக சதுர்த்தி. ஆடி அல்லது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தை நாக சதுர்த்தியாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அன்று நாகராஜரை நினைத்து விரதம் இருப்பது நல்லது. தேவர்களும், அசுரர்களும் சாகா மருந்தான அமுதம் வேண்டி, பாற்கடலைக் கடைந்த போது, மந்தர மலை மத்தாகவும், ஆதிசேஷன் என்ற பாம்பு கயிற்õகவும் பயன்பட்டன. அதன் வாலையும், தலையையும் இழுத்த போது, வலி தாளாமல் அதன் வாயிலிருந்து விஷத்துளிகள் விழுந்தன. சிவன் பெரும்பகுதியை விழுங்கி விட்டார். இருப்பினும், அதிலிருந்து சிந்திய சில துளிகளை, உலகிலுள்ள நாகங்களும் பருகி மக்களைக் காப்பாற்றின. அதற்கு நன்றி தெரிவிக்கவே, ஆடி மாத வளர்பிறை சதுர்த்தியன்று, நாக சதுர்த்தி விரதத்தை மக்கள் அனுஷ்டிக்கின்றனர். இது தவிர, இன்னும் பல காரணங்களும் உண்டு. நாகர்கோவில் நாகராஜா கோவில், கும்பகோணம் நாகநாதர் கோவில் இன்னும் நாகரை முக்கிய தெய்வமாகக் கொண்ட உங்கள் உள்ளூர் கோவில்களுக்கு இந்நாளில் சென்று வரலாம். பல கோவில்களில் அரசமரத்தின் கீழ் நாகர் சிலைகள் இருக்கும். அவற்றுக்கு பாலாபிஷேகம் செய்து, விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வேண்டி வரலாம்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ