உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சிசேரியன் பிரசவம் எப்போது துவங்கியது தெரியுமா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சிசேரியன் பிரசவம் எப்போது துவங்கியது தெரியுமா | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சிசேரியன் பிரசவம் எப்போது துவங்கியது தெரியுமா திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை ஒரு காலத்தில் வல்லாள ராஜா என்பவர் ஆண்டு வந்தார். பறவைகள் தானியங்களைத் தின்றுவிடும் என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி, அவற்றை வரவிடாமல் தடுக்குமளவு கருமி அவர். புண்ணியமே செய்யாததால் குழந்தை பாக்கியம் இல்லை. அப்போது, ராஜாவுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது. “அம்மா! எனக்கு குழந்தையில்லை. நாடாள குழந்தை வேண்டும்,” என வேண்டினார். அந்த கஞ்சரையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சி சோதிக்க ஆரம்பித்தாள். ராணி கர்ப்பமானாள். ஆனால் 15 மாதமாகியும் குழந்தை பிறக்கவில்லை. ராஜாவும், ராணியும் கலங்கிப் போனார்கள். பேச்சியம்மனை தேடி ஓடினர். முதியவள் வடிவத்தில் வந்த அம்மன், ராணியை தன் மடியில் வைத்து, வயிற்றைக் கிழித்து, குழந்தையை இடுப்புக் கொடியுடன் வெளியே எடுத்தாள். அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் அங்கு தங்கினாள். அங்காளம் என்றால் அழகிய வடிவம் கொண்டவள் என பொருள். பெருமாளைத் தான் சயனநிலையில் பார்க்க முடியும். இங்கு அங்காள பரமேஸ்வரியும் சயனிலையில் இருப்பது விசேஷம். இவளது உயரம் எட்டே முக்கால் அடி.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை